அயோத்தி தீர்ப்பால் தலைப்பாகை அணியும் ஷத்ரியர்கள்

0
239
அயோத்தி தீர்ப்பால் தலைப்பாகை அணியும் ஷத்ரியர்கள்

அயோத்யாவிலும் அதனை சுற்றியுள்ள 150 கிராமங்களிலும் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக சூர்யவன்ஷி ஷத்ரியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை ஸ்ரீராமபிரானின் வழிவந்தவர்கள் என்று கருதுகின்றனர். இவர்கள் 500 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தலைப்பாகை அணியத் துவங்கியுள்ளனர்.

அயோத்தியில் ஸ்ரீராம ஜன்ம பூமியில் இருந்த ராம்லல்லா ஆலயத்தை காத்திட பாபருடன் போரிட்டவர்கள் சூரியவன்ஷி ஷத்ரியர்கள். ஸ்ரீராம ஜன்ம பூமியைப் பாதுகாத்திட பாபரை எதிர்த்து தாகூர் கஜசிங் அவர்கள் தலைமையில் கடுமையாகப் போர்புரிந்த இவர்கள் தோல்வியைத் தழுவினர். அப்போரில் ஏராளமான சூரியவன்ஷி ஷத்திரியர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போதிலிருந்து ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்கும் வரை தலைப்பாகை அணியமாட்டோம், குடை பிடிக்கமாட்டோம், காலில் தோலால் தயாரிக்கப்பட்ட காலணி அணியமாட்டோம் என்று சபதம் ஏற்றனர்.

500 வருடங்கள் கடந்த பிறகும் கூட தங்கள் முன்னோர்கள் செய்த சபதத்தைக் காத்து பின்பற்றி வந்தனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்ற இவர்கள் கிராமங்களில் பொதுவிழாக்கள் நடத்தி தலைப்பாகையை ஷத்ரிய வம்சத்தினருக்கு அளித்து வருகின்றனர். இதுவரை 400க்கும் அதிகமான தலைப்பாகைகள் வழங்கப்பட்டுள்ளன. அயோத்தியை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறத் துவங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here