அயோத்யா தாக்கப்படலாம் உளவுத்துறை எச்சரிக்கை

அயோத்யா தாக்கப்படலாம் உளவுத்துறை எச்சரிக்கை

Share it if you like it

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அயோத்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை, மத்திய அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது. 7 பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவில் ஊடுருவியிருப்பதாகவும் அவர்கள் அயோத்தியில் தாக்குதல் நடத்தி மக்களிடையே பதற்றத்தை உண்டாக்க முயற்சிமேற்கொள்வதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஏழு பயங்கரவாதிகளில் ஐந்து பேர் உளவுத்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐந்து பயங்கரவாதிகள் முகம்மது யாகூப், அபு ஹம்சா, முகம்மது ஷாபாஸ், நிசார் அஹமட் மற்றும் மொஹமட் சவுத்ரி. இன்னும் ஒரு வாரத்தில் ராமஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it