ஆங்கிலேயன் வழங்கிய இந்தியா என்று சொல்வதை நிறுத்திவிட்டு, நமது முன்னோர்கள் வழங்கிய பாரதம் என்று அழைப்போம் !

ஆங்கிலேயன் வழங்கிய இந்தியா என்று சொல்வதை நிறுத்திவிட்டு, நமது முன்னோர்கள் வழங்கிய பாரதம் என்று அழைப்போம் !

Share it if you like it

  • [contact-form-7 404 "Not Found"]

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பெயர் பாரதம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பா என்றால் சமஸ்கிருதத்தில் ஒளி அல்லது ஞானம் என்று பொருள்படும். ரதம் என்றால் பக்தி என்று பொருள்படும். அதாவது உலகிற்கே ஞானத்தை வழங்கிய பாரதம் என்று பொருள்படும். இந்த வார்த்தையை உச்சரிக்கும்பொழுது நமக்குள் ஒரு மின்அலை பாய்வது போல் ஒரு உணர்வு ஏற்படும். மேலும் அந்த வார்த்தையை சொல்லும்பொழுது நமது முன்னோர்களின் ஞானம், வீரம், கலாச்சாரம், பண்பாடு, கொடை, இவை எல்லாம் நம் மனக்கண் வந்து போகும். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டிருந்த காலத்தில் பாரதம் என்று சொன்னால் நம் முன்னோர்களின் ஞானமும் வீரமும் நம் கண்முன் வந்து நின்று நமக்குள் ஒரு தைரிய உணர்வு நிகழ்வதை நாம் காண முடியும். எனவே ஆங்கிலேயன் நம்மை நம் முன்னோர்களின் ஞானமும்,வீரமும் நமக்கு ஞாபகம் வரக்கூடாது என்று இந்தியா என்று பெயரை மாற்றினான். “இந்தியா” என்ற சொல் “சிந்து” என்ற சமஸ்கிருத வார்த்தையின் மேற்கத்திய ஒலிபெயர்ப்பு ஆகும், இதன் பொருள் “நீர் உடல்” என்று பொருள்படும்.

  • நமது முன்னோர்கள் அப்பொழுதே ஞானத்துடனும், வீரத்துடனும், நாகரீகத்துடனும் வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார்கள். நமது முன்னோர்கள் எல்லா கலையிலும் மிக சிறந்து விளங்கியுள்ளனர். கட்டிடக்கலை, ஜோதிடம், வானவியல் சாஸ்திரம், மருத்துவம், கல்வி என அனைத்திலும் கொடி கட்டி பறந்துள்ளனர்.
    எனவே நமது முன்னோர்களின் வழியை பின்பற்றி நாமும் நமது நாட்டை இனிமேல் பாரதம் என்று அழைப்போம்.
  • இந்தியா என்பது பெயர், பாரதம் என்பது உணர்வு. நமது முன்னோர்களின் ஞானத்தையும், வீரத்தையும்,பெருமையையும் நாம் உணர்வோம்.

Share it if you like it