இந்திய பத்திரிக்கைகளில் சீனாவின் “கை” ஓங்கியுள்ளது…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல இணையதள ஊடகம்..!

0
1838

20 இந்திய எல்லைச்சாமிகளின் வீரமரணத்திற்கு காரணமான சீனாவிற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளது. சீன செயலிகளுக்கு தடை, சீன பொருட்களுக்கு தடை, இறக்குமதி பொருட்களுக்கு கடும் கட்டுபாடு, என்று இந்திய மக்களின் உணர்வுகளை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி கொண்டே வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் பிரபல இணையதள ஊடகமான wion பின்வருமாறு செய்தியினை அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில், பல முக்கிய இந்திய நாளிதழ்களில் சீனாவிற்கு ஆதரவான தகவல்களே தலையங்கத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளது. என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியிட்டு இருப்பது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளின் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. தற்பொழுது இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்து விடுமோ என்கின்ற அச்சம் இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here