மோடியை போல சிறந்த ஆட்சியை பாகிஸ்தான் மக்களுக்கு வழங்குவேன் என்று அந்நாட்டு மக்களிடம் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றார் இம்ரான் கான்.
அதன் பின்பு சீனாவின் அடிவருடியாக மாறிய பாகிஸ்தான் இன்று வரை இந்தியாவிற்கு கடும் தொல்லைகளை வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியா எவ்வளவு தான் நட்பு கரம் நீட்டினாலும். பாரத தேசத்திற்கு எதிராக இன்று வரை வன்முறை போக்கையே மேற்கொண்டு வருகிறது அந்நாடு.
தற்பொழுது 2 நாள் பயணமாக இலங்கை செல்ல உள்ள இம்ரான் கான். தங்கள் நாட்டு விமானம் இந்தியாவில் தரை இறங்கி செல்ல. அனுமதி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரியது. இதற்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.