இம்ரான் கான் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்…! அமெரிக்காவிடம் ஆதாரத்தோடு முறையிட்ட…! இமாம் முகமது தவ்ஹிடி…!

0
1615

உலகிலேயே தீவிரவாதிகளுக்கு பென்ஷன் கொடுத்து தாலாட்டி, பாராட்டி, வரும் நாடாக பாகிஸ்தான் இன்று வரை திகழ்கிறது. என்று பல நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில்  இஸ்லாமிய மக்களிடையே, நன்மதிப்பு பெற்றவரும், உலகம் முழுவதும் அமைதி, திகழ வேண்டும் என, உழைக்க கூடியவர் இமாம் தவ்ஹிடி. இம்ரான் கானிற்கு எதிராக  தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

”பாகிஸ்தான் பிரதமர் ஒசாமா பின்லேடனை “தியாகி” என்று கூறுகிறார். பயங்கரவாதத்தை பாகிஸ்தானில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடமே நிதி கேட்கிறார். என்ன ஒரு பித்தலாட்டம்.

பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும் அல்லது அமெரிக்காவை விட்டே அந்நாட்டு தூதரை வெளியேற்ற வேண்டும். என்றும் மறக்க மாட்டோம் 9/ 11 என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here