ஐ.நாவில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாகும்

ஐ.நாவில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாகும்

Share it if you like it

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் இந்தியா விரைவில் நிரந்தர உறுப்பு நாடாகும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் ஐ.நா பாதுகாப்பு சபை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஷங்கர், ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க அனைத்து விதமான பணிகளையும் அரசு மேற்கொண்டுவருவதாக  தெரிவித்தார். தற்போது அமெரிக்கா, ரஷியா ,சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடாவதன் மூலம் ஐ.நா சபையில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இயலும். முன்னரே பாதுகாப்பு சபையில் இணைவதற்க்காக வந்த வாய்ப்பை முன்னாள் பிரதமர் நேரு தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it