ஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..?

ஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..?

Share it if you like it

கேரள மாநிலம் கொல்லம் அடுத்துள்ள கிளி கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப். இவர், சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சரவியூ விடுதியில் அறை எண் 349-ல் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு பாத்திமா லதீபுக்கு அவரது தாயார் சஜிதா லதீப் போன் செய்துள்ளார். ஆனால் பாத்திமா லதீப் போனை எடுக்கவில்லை. நேற்று காலையில் போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சஜிதா லதீப் தனது மகளின் தோழிகளுக்கு போன் செய்து, பாத்திமா லதீப் போன் எடுக்காத விவரத்தை கூறினார். இதையடுத்து தோழிகள் அவரது அறை கதவை தட்டினர். வெகு நேரமாகியும் அவர் கதவை திறக்காததால், விடுதி ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்தனர்.

விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாத்திமா லதீப், நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்களும், அவரது தோழிகளும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியத்தில் அந்த பெண்ணின் செல்போனில் ஒருவேளை தான் இறந்துவிட்டால் அதற்கான முழுக்காரணம் ஹேமா சந்திரகாரா, மிலின் பிராமி மற்றும் சுதர்ஷன் பத்மநாபன் ஆகியோர் மட்டுமே என குறிப்பிடபட்டுள்ளது.

இதில் குறிkollam-fathima-lateef-sucide-leaterப்பிடப்பட்டுள்ள சுதர்ஷன் பத்மநாபன் அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரீபார்ம் எனும் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர். இந்த சங்கத்தின் பிரதான வேலையே அரசிற்கு எதிராக மாணவர்களை மூளைச்சலவை செய்வதுதான்.

இரண்டாவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மிலன் பிராமே , JNU பல்கலைக்கழக பட்டதாரி. அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் ஆலோசகராக இருந்து வருகிறார். இந்த அமைப்பு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் மாட்டுக்கறி விருந்து நடத்தி ஜெயின் மாணவர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலில் ஈடுபட்டது.

மூன்றவதாக குற்றம் சாட்டபட்டவரின் விவரம் இன்னும் தெரியவரவில்லை.ஆனால் தற்பொழுது இந்த மூன்று நபர்களும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது

அந்த மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை ஆனால் இதுவரை ஐ.ஐ.டி ல் 5 தற்கொலைகள் நடந்துள்ளன ஆனால் அதற்கெல்லாம் வாய்திறக்காத வலைதள போராளிகள் வழக்கம் போல இறந்த பெண்னின் ஜாதி, மதம் போன்றவற்றை ஆராந்து உடனே தனது வெறுப்பு அரசியலை துவங்கிவிட்டனர் ரோஹித் வெமுலா, அனிதா, சசி பெருமாள், சுஜித் போன்றவர்களின் மரணத்தை வைத்து செய்த பிண அரசியலை இந்த பெண்ணின் மரணத்திலும் செய்யாமல் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதே நம்மனைவரது கோரிக்கையுமாகும்.


Share it if you like it