கட்டணத்தை உயர்த்திய நிறுவனங்கள்

கட்டணத்தை உயர்த்திய நிறுவனங்கள்

Share it if you like it

செல்போன் கட்டணத்தை ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவங்கள் உயர்த்தியுள்ளன. இந்திய தொலைத்தொடர்புத்துறையானது ஜியோவின் வருகைக்கு பின்னர் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஜியோ அளித்த சலுகைகளால் பல முன்னணி நிறுவங்கள் தங்களின் பயனர்களை இழந்தது. அதனால் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டன. ஜியோவிற்கு போட்டியாக சலுகைகளை வாரிவழங்கியதால் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. அதனை ஈடுசெய்ய  தற்போது ப்ரீபெய்ட் கட்டணத்தை 40 சதவீதம் அளவிற்கு உயர்த்தி நிறுவங்கள் அறிவித்துள்ளன. அதே போன்று இன்டர்நெட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இது இணையவாசிகளிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it