கரசேவையை ஆதரித்து பேசியவர் ஜெயலலிதா

0
195
வகரசேவையை ஆதரித்து பேசியவர் ஜெயலலிதா.

1992ம் ஆண்டு டெல்லி ஜான்சிராணி மைதானத்தில் விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் அமைப்பை சேர்ந்த ஐந்தாயிரம் சந்நியாசிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் பாபர் மசூதியை அகற்றுவதற்கு ஆதரவு தராமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் டிசம்பர் 6ம் தேதி கரசேவையை தொடங்குவது என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது’ என்றும் முடிவெடுத்தார்கள்.

கரசேவையைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் அறிக்கை வெளியிட்டன. பிரதமருக்கு, தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கும்  அதிகாரத்தை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே கூட்டத்தில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா “டிசம்பர் 6‌ம் தேதி பாரதீய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் மற்றும் சில அமைப்புகள் கரசேவை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. கரசேவையை நடத்துவதற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும்” என்று பேசி, அது நாளிதழ்களிளும் வெளியானது. மேலும்

“அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மை சமூகத்தினரின் உரிமைகளை பாதிக்கும் வகையில், சிறுபான்மையினர் தங்கள் நலன்களை முன்னிறுத்துவது ஏற்றது அல்ல. இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் ஹிந்துக்கள். ஹிந்துக்கள் தங்களுடைய மதம் சம்மந்தப்பட்ட லட்சியங்களை அரசியல் சட்டத்திற்கு முரண்படாத வகையில் நிறைவேற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

சிறுபான்மையினரைப்போலவே பெரும்பான்மையினரும் தங்களின் உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அயோத்தி பிரச்சனையில், உத்தரப் பிரதேச அரசு கைப்பற்றிய இடத்தில் ஹிந்துக்களின் விருப்பப்படி கட்டிடம் கட்ட அனுமதிக்க வேண்டும்.

நீதிமன்றம் மூலம் கரசேவைக்கு அனுமதி பெறவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அயோத்தியில் கோயில் கட்ட வேண்டும் என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பம். மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது”. என்று வேண்டுகோள் வைக்கிறென்.

இவ்வாறு கரசேவையை ஆதரித்து ஒருமைப்பாட்டு மன்றத்தின் கூட்டத்திலேயே பேசியவர்தான் ஜெயலலிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here