காஞ்சிமடம், ஈஷா மையம், என்றால் விவாதம் நடத்தி இருப்பீர்கள்…! பால் தினகரன் குறித்து ஏன்? வாய் திறக்கவில்லை பிரபல ஊடகத்தை துவம்சம் செய்த நேயர்….!

0
352
காஞ்சிமடம், ஈஷா மையம், என்றால் விவாதம் நடத்தி இருப்பீர்கள்...! பால் தினகரன் குறித்து ஏன்? வாய் திறக்கவில்லை பிரபல ஊடகத்தை துவம்சம் செய்த நேயர்....!

பால் தினகரன் அலுவலகத்தில் அண்மையில் அதிரடி சோதனை நடைபெற்றது.. இதில் பல முக்கிய ஆவணங்கள், மற்றும் திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகளுக்கு பணம் கை மாறியுள்ளதாக குமுதம் ரிப்போர்டர் பகீர் தகவல்கள் கூறியது..

நடுநிலை ஊடகம் என்று தங்களை காட்டி கொள்ளும் எந்த ஒரு ஊடகமும் இது குறித்து வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்தது என்பது அனைவரும் அறிந்ததே..

இதுவே சங்கரமடம், ஈஷா யோக மையம், ஹிந்து மதம், என்றால் அலறி அடித்து கொண்டு கை கூலி ஊடகங்கள், சில்லறை போராளிகள், தி.க. தி.மு.க, திருமா, சீமான், வேல்முருகன், சுந்தரவள்ளி, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், போராட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் மட்டுமே புனிதர்கள் மற்றவர்கள் எல்லாம் மிகவும் மோசம் என்பது போல் மிக சிறப்பாக நாடகம் நடத்தி இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்..

பால் தினகரன் குறித்து ஏன்? நீங்கள் விவாதம் நடத்தவில்லை என்று தந்தி டிவி-யை தொடர்பு கொண்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நேயர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here