கேரளாவில் ஹிந்து வழிபாடு முறைகளை கேலி செய்து இஸ்லாமிய ஜிஹாதிகள் அட்டூழியம் !

0
3845
  • கேரளாவில் ஹிந்துக்களின் மத வழிபாட்டு முறைகளை கேலி செய்யும் விதமாக ஒரு வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வெங்கராவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்த ஹிந்து தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை சில இஸ்லாமிய ஜிஹாதிகள் வழங்கியுள்ளனர்.
  • பொருட்கள் விநியோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமிய ஜிஹாதிகள் ஹிந்து தொழிலாளர்களின் பூஜை மற்றும் பிரார்த்தனையில் தலையிட்டு புனிதமான ஹிந்து மந்திரங்களை அருவருப்பான முறையில் உச்சரிப்பதன் மூலம் இந்து மத நடைமுறைகளை கேலி செய்துள்ளனர்.
  • இஸ்லாமிய ஜிஹாதிகள் ஹிந்து மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் கேலி செய்யும் விதத்தில் கோஷமிட்டனர். அந்த மந்திரத்தின் வார்த்தைகளை தவறான வார்த்தைகளால் மாற்றினர். ஹிந்து மக்களால் பெரிதும் வணங்கப்படுகின்ற ஸ்ரீ ராமர் , மகா விஷ்ணு உள்ளிட்ட இந்து கடவுள்களை கேலி செய்தார்கள். இந்து கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களான உணவு மற்றும் நமஸ்காரம் ஆகியவற்றிற்கு வணக்கம் செலுத்தும் இந்து முறைகளையும் அவர்கள் இழிவுபடுத்தினர்.
  • அந்த வீடியோவில் பகவான்கார்த்திகேயனையும், பிற இந்து கடவுள்களையும் மிகவும் கேவலமான முறையில் அந்தவன், கடவுல் போன்று கேலி செய்யும் விதமாக ஜிஹாதிகள் பேசுகிறார்கள்.
  • இந்துக்களின் உணர்வுகளை ஆழமாக புண்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.
  • இதற்கிடையில், பல சமூக ஊடக தளங்களில் இந்த சம்பவம் குறித்து கோபம் அதிகரித்து வருகிறது மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் இஸ்லாமிய ஜிஹாதிகளை உடனடியாக கைது செய்யக் கோரியுள்ளன. பாஜகவின் பஞ்சாயத்து குழு வெங்கரா காவல் நிலையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, அந்த இஸ்லாமிய ஜிஹாதிகளான, இப்ராஹிம் பரயில் வலியோரா, சலாம் வாலாப்பில் வலியோரா, நிஜாமுதீன் மற்றும் ஹமீத் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.
  • மேலும் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. வெங்கரா என்பது மலப்புரம் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதியாகும். இங்கு மொத்த மக்கள் தொகையில் 14% இந்துக்கள் இல்லை. சுமார் 85% முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட, வெங்கரா இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒரு தவிர்க்கமுடியாத கோட்டையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here