கொல்ல வந்த பயங்கரவாதியின் உயிரை காத்த இந்திய ராணுவம் – உலகளவில் ட்ரெண்டிங்

0
1743
கொல்ல வந்த பயங்கரவாதியின் உயிரை காத்த இந்திய ராணுவம் - உலகளவில் ட்ரெண்டிங்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது நடவடிக்கையின் போது 31 வயதான ஜஹாங்கிர் என்னும் பயங்கரவாதி கையில் துப்பாக்கியுடன் தனியாக ராணுவ வீரர்களிடம் மாட்டிக்கொண்டான். அவனிடம் நமது அன்பாக பேசி எதுவும் செய்யமாட்டோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து, உறுதிமொழியை ஏற்ற பயங்கரவாதி, நமது வீரர்களிடம் சரணடைந்தான். அவருக்கு நமது ராணுவ வீரர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இந்நிலையில், பயங்கரவாதியின் தந்தை, ஓடிவந்து ராணுவ வீரர்களின் காலில் விழுந்து, மகனை கொல்லாமல் சரணடைய செய்ததற்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்திய நாட்டின் வீரர்கள் துப்பாக்கி ஏந்துவது தாய்நாட்டின் பாதுகாப்பிற்கே அன்றி யாருடைய அழிவிற்கும் இல்லை என பறைசாற்றி உள்ள இந்த சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here