சிறுதாவூர் பஞ்சமி நிலத்தை பாஜக மீட்குமா…! ஜெயாவிற்கு ‘அடியாள் வேலை பார்த்த உங்களுக்கு இப்பொழுது என்ன? பஞ்சமி நிலத்தின் மீது திடீர் அக்கறை- ஷியாம் கிருஷ்ணசாமி!

0
1010

ஆர்.எஸ். பாரதி பட்டியல் சமூக மக்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு திருமாவளவனோ அல்லது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களோ தங்களது எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை. அண்மையில் ஆர்.எஸ் பாரதியை காவல்துறை கைது செய்தது. இதற்கு திருமாவளவன் மிக கடுமையான கண்டனத்தை தமிழக அரசிற்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜகவிற்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

 சிறுதாவூர்பங்களாவும் பஞ்சமிநிலத்தில்தான் உள்ளதென குற்றச்சாட்டு உள்ளதே; அது பாஜகவுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியுமெனில், அதனையும் மீட்டு தலித்மக்களிடம் ஒப்படைக்க _? அதன்மூலம் தலித்மக்கள் மீதான தமது அக்கறையை உறுதிப் படுத்துமா?

இதற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் மகன் திருமாவிற்கு இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

BJP போராடுவது இருக்கட்டும் திருமா சார் 2006யில் சிறுதாவூர் பிரச்சனையை டாக்டர் கிருஷ்ணசாமி கையில் எடுத்தபோது ஓடோடி வந்து அன்றும் ஜெயாவிற்கு ‘அடியாள் வேலை’ பார்த்தது நீங்க தானே? இப்போ பாஜக எதிர்ப்பு அரசியலுக்காக பறையர் மக்களின் நிலத்தின் மீது திடீர் அக்கறையோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here