ஜாகீர் நாயக்கை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க – அமலாக்கதுறை வேண்டுகோள்

0
122

பயங்கரவாதத்தை தூண்டியதாகவும், கருப்பு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் மீது தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்தியாவில் தலைமறைவானவர் என அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை பிடிக்க சரவதேச போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளது. இப்போது மலேசியாவில் இருக்கும் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக மத வெறுப்பை தூண்டியதாக அங்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய சட்டத்தின் கீழ் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்கை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) சிறப்பு பண மோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் திங்களன்று விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. மூடி முத்திரையிடப்பட்ட உறை ஒன்றில் துணை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்த கோரிக்கை மீதான விசாரணை செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறும். 

கடந்த வாரம் நாயக்கிற்கு எதிராக அமலாக்கதுறை புதிய ஜாமீன் பெற முடியாத வாரண்டை பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

அவர் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்று அமலாகத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமலாக்கத்துறை இதுவரை ரூ.50.49 கோடி மதிப்புள்ள நாயக்கின் சொத்துக்களை இணைத்துள்ளது. பாத்திமா ஹைட்ஸ், ஆஃபியா ஹைட்ஸ், எங்ரேசியா (புனே) மற்றும் மும்பை பாண்டூப்பில் ஒரு திட்டத்தில் சொத்துக்களை வாங்க நாயக் ரூ.17.65 கோடி செலவிட்டுள்ளார் என அளிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here