தர்பார் 9-ஆம் தேதி ரிலீஸ்-ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
409

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்துள்ளார். டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் ரஜினிகாந்தின் அதிரடி சண்டை காட்சிகளும் பஞ்ச் வசனமும் இடம்பெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் தர்பார் சிறப்பு காட்சியை ஒரு நாள் முன்னதாக 8-ந்தேதி திரையிட உள்ளனர். தர்பார் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர்.
படம் 9-ஆம் தேதி வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here