திமுக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றி விடுவதாக கூறி இருந்தது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்கள், திமுக முடிவை, கடுமையாக எதிர்த்து உள்ளார்.
“சித்திரை 1 தான் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு எனவும், அதை மாற்றக் கூடாது” எனவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…