திருப்பதியை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ மிஷ”நரி”கள்

0
207

ஆந்திர மாநில தலைமைச் செயலரின் எச்சரிக்கையையும் மீறி, கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்திய 3 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆந்திர மாநில தலைமைச் செயலர் எல்.வி. சுப்பிரமணியம் கடந்த ஒரு மாதத்துக்கு முன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர மாநில அறநிலையத் துறை ஆகியவற்றில் பணியில் இருக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் இந்துக்களாகவே இருக்க வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர மாநில அறநிலையத் துறை ஆகியவற்றில் பணியில் இருப்பவர்கள் தொடர்ந்து இந்துக்களாக இருக்கிறார்களா? இந்து மத சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறார்களா? எனக் கண்காணிக்க அறநிலையத் துறையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். அவர்கள் பிற மத சம்பிரதாயங்களைப் பின்பற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், திருப்பதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீ பத்மாவதி கல்லூரி உயிரியல் துறை பேராசிரியை ஒருவர், தேவஸ்தான கேட்டரிங் துறை ஊழியர் ஒருவர், தேவஸ்தான மருத்துவமனை ஊழியர் ஒருவர் என 3 பேர் தேவாலத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றது தொடர்பான காட்சிகள், ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, அந்த 3 பேர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து தேவஸ்தான நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து பாஜக ஆந்திர மாநிலச் செயலர் பானுபிரகாஷ் ரெட்டி கூறுகையில், வேற்று மத சம்பிரதாயங்களைப் பின்பற்றி வரும் திருமலை தேவஸ்தான ஊழியர்கள் 3 பேர் மீதும் தலைமைச் செயலரின் அறிவிப்புக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவஸ்தானத்தில் இந்து அல்லாதவர்கள் யாராவது பணியில் இருப்பது தெரியவந்தால் அவர்களை உடனடியாக

பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here