தேசியக் கொடியை ஏற்றிய மாணவர் – கொலைசெய்த கம்யூனிஸ்ட்கள் – 1982-ல் நடந்த கொடூரம்

0
659

காகதீய பல்கலைக்கழக (ஆந்திரா) ஆராய்ச்சி மாணவர். செயல் வீரர்.

1980 ஜனவரி 26 குடியரசு தினம். காகதீய பல்கலைக்கழகத்தில் & தற்போதைய தெலுங்கானா பகுதிகளில் நக்சலைட்டு களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. நக்சலைட்களின் பிடியில் காகதீய பல்கலைக் கழகமும் அகப்பட்டுக் கொண்டு திணறியது. (RSU) நக்சலைட்டு களின் மாணவர் அணி ஒரு அறிக்கை வெளியிட்டது. ஜனவரி 26 குடியரசு தினத்தை புறக்கணிக்க வேண்டும். மூவர்ண தேசியக்கொடி பல்கலைக்கழக வளாகத்தில் பறக்கவிடக் கூடாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
காகதீய பல்கலைக்கழக நிர்வாகம், அப்போதைய ஆந்திர அரசு உட்பட நக்சலைட்டுகளின் மிரட்டலுக்கு பயந்து கைகட்டி வாய்பொத்தி இருந்தன. ஆனால் தேசபக்த மாணவர்களால் இந்த அவமானத்தைப் பார்த்துக் கொண்டு கைகட்டி, வாய்பொத்தி இருக்க முடியவில்லை. சாமா ஜகன் மோகன் ரெட்டியின் தலைமையில் திரண்டது மாணவர் படை.

26 ஜனவரி 1980 அன்று சாமா ஜெகன் மோகன் தலைமையில் அணிதிரண்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜய் என்று வெற்றி முழக்கமிட்டுக் கொண்டு பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தின் முன்பிருந்த கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை வெற்றிகரமாக பறக்க விட்டனர். இச்செயலை தேசவிரோத நக்சலைட்டு களால் சகித்துக்கொள்ள இயலவில்லை.

இதற்காக பழிவாங்கத் திட்டம் தீட்டிக் காத்திருந்தனர்.
29 ஏப்ரல் 1982 வாரங்கல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஏ.பி.வி.பி. செயல்வீரர் சாமா ஜகன் மோகன் ரெட்டியைக் பட்டப்பகலில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வெட்டி கொலை செய்தனர்.
இன்று சாமா ஜகன் மோகன் ரெட்டியின் நினைவு தினம். இன்றைய தெலுங்கானா பகுதியில் அதிலும் குறிப்பாக கிறாமப்புறங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், கல்லூரி விடுதிகளில் நக்சலைட்டுகள் நடத்தி வந்த காட்டாச்சி கட்டப்பஞ்சாயத்துகளின்

கொடுமைகளையும் அடக்குமுறை களையும் எதிர்த்து வித்யார்த்தி பரிஷத் ஒரு 15–20 வருட காலம் பெரும் போராட்டங்களை மாணவர்களின் ஆதரவுடன் நடத்தியது. சாமா ஜகன் மோகன் ரெட்டியைப் போன்று சுமார் 50 மாணவர்கள் மற்றும் BJP, BMS தொண்டர்கள், அப்பாவி பொது மக்கள் பலர் தங்கள் இன்னுரை ஈந்து தெலுங்கானா பகுதியை நக்சலைட்டுகளிடமிருந்தும் போலி செகியூலர்வாதிகளிடமிருந்தும் எப்பொழுதும் பலவேடங்களைத் தரித்து மக்களைக் குழப்பிவரும் கம்யூனிஸ்ட் களிடமிருந்தும் காப்பாற்றியுள்ளனர்.

சாதாரண மக்களை நக்சல்களுக்கு எதிராகப் போராட நம்பிக்கையளித்து ஒன்று திரட்டிய ஆந்திர ஏ.பி.வி.பி. காரிய கர்த்தர்கள் அனைவருக்கும் இன்றைய நாள் வரை பலிதானி சாமா ஜெகன் மோகன் ரெட்டி ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். அன்று அவர் சிந்திய ரத்தம் வீணாய் போகவில்லை. சாமா ஜகன் மோகன் ரெட்டியின் புகழ் என்றென்றும் வித்யார்த்தி பரிஷத் செயல் வீரர்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டிடும். சாமா ஜகன் மோகன் ரெட்டிக்கு நமது வீர அஞ்சலியை செலுத்திடுவோம்.

_ Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here