தேசிய கீதத்தை டிக்- டாக்கில் இழிவுப்படுத்திய ஹன்னா ஆபிராகம் பெண் மீது குவியும் புகார்!

0
880

ஒழுக்கமானவர்கள், கண்ணியம் மிக்கவர்கள் என்று உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு நற்பெயர் உள்ளது. கனடாவில் தற்பொழுது படித்து கொண்டு இருக்கும் ஹன்னா ஆபிராகம் என்கின்ற இந்திய ஒட்டு மொத்த இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.

இந்தியர்களால் மிகவும் உயர்வாக கருதப்படும் தேசீய கீதத்தை டிக் டாக்கில் ஹன்னா ஆபிராகம்  மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து காணொலியாக வெளியிட்டு இருப்பதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் அப்பெண்ணிற்கு குவிந்து வருகிறது. நாளுக்கு நாள் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தேச பக்தர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை கஸ்தூரி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

சட்டப்படி, இந்த நபர் இந்திய அரசியலமைப்பின் 51 ஏ பிரிவை மீறியுள்ளார் மற்றும் சிறைக்கு செல்ல வேண்டியவர். குற்றவாளி மீது ஒரு சுய மோட்டோ கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படலாம். தேசிய கீதம் மோடி அல்லது பாஜக அல்லது வேறு எவரையும் விட மிகவும்உயர்வானது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here