தேச நலன், சமூக நலன் கொண்ட, தமிழர்கள் இயக்கும் இயந்திரம்- மீடியான்!

0
250

பல ஊடகங்கள் சொல்ல மறக்கின்ற மற்றும் உங்களிடம் இருந்து மறைக்கின்ற செய்திகளை உடனுக்கு உடன் மக்களுக்கு வழங்குவதில் உண்மையுடனும், உள்ள தூய்மையுடனும், வழங்கி வரும் மீடியானின் வளர்ச்சியை பிடிக்காத தேச விரோத கும்பல்கள், மர்ம நபர்கள், சில அடிப்படை பயங்கரவாதிகள்  இணைய தளத்தின் மீது நேரடி தாக்குதலில் இறங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் எங்கள் முகநூல் பக்கத்தில் தாக்குதல் நிகழ்த்தினர். எங்களின் தீவிர முயற்சியின் மூலம்  நாங்கள் மீண்டும் எழுந்தோம். அதபோல் மார்ச் மாதம் ஹலோவில் மீடியான் மீது அதே சில்லறை கும்பல் தாக்குதல் நிகழ்த்தினர். ஏப்ரல் மாதம் இறுதியில் மீடியான் யூ டியூப் சேனலை ரிப்போர்ட் செய்து முடக்க பார்த்தனர்.

கடந்த சில நாட்களாக, எங்கள் மீடியான் இணைய தளத்தையே, முடக்க முயற்சித்து வந்தனர். இன்று இரண்டு முறை முழுமையாக முடக்கினர். ஆனால் எங்கள் தொழில் நூட்ப குழுவின் தீவிர முயற்சியால் மீண்டும் மீடியான் இணைய தளம் வழக்கம் போல் இயங்க தொடங்கியது.

இப்படி தொடர்ந்து முகநூலில் துவங்கி, ஹலோ வழியாக, யூ டியூப் வந்தடைந்து இறுதியில் இணையத்திலேயே கை வைத்துள்ளார்கள். இது நேரடி மனித தாக்குதலாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதை நன்கு அறிவோம். 200 ரூபாய் உடன் பிறப்புக்கள் மற்றும் ஜாதி, மத, அடிப்படைவாத கும்பல்களுக்கு அவர்கள் செய்யும் தவறை யாரேனும் சுட்டிக்காட்டினால் பொறுக்கும் சகிப்பு தன்மை இல்லை.

மக்களுக்கு உண்மையான செய்திகளை தொடர்ந்து வழங்கி கொண்டே இருப்போம். எங்கள் மீடியான் மீது எவ்வளவு வன்மம் நிறைந்த கருத்துகளை வீசினாலும், எங்களையே முடக்க நினைத்தாலும், சமூக விரோதிகளின் மீது தொடர்ந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்.

மீடியான் என்பது தனிநபர் அல்ல, அது ஒரு இயக்கமும் அல்ல, மாறாக தேச நலன், சமூக நலன், கொண்ட தமிழர்கள் இயக்கும், இயந்திரம் நாங்கள் அவர்களின் பிரதிநிதிகள் மட்டுமே.

எங்களுக்கு விளம்பரம் தேடி தருவதை கொள்கையாக கொண்டுள்ள சமூக விரோத  சகோதர்களுக்கும். எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும், தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி நன்றி!!  வாழ்க தமிழ், வளர்க பாரதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here