தேவரும் குருஜியும் சந்தித்தது உண்மை தான்..! ஆராய்ச்சி அறிவு அவசியம் அமைச்சரே..!

1
462

கடந்த அக்டோபர் 30 ம் தேதியன்று YOU TURN என்ற இணையதள பக்கத்தில் ஹிந்து அமைப்புகள் முத்துராமலிங்க தேவரும், ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது தலைவரும் சந்தித்ததாக பொய் செய்தி பரப்பியதாகவும் அதுகுறித்து தாங்கள்  உண்மையை கண்டுபிடித்துவிட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டது அதில்.

“1956-ல் கோல்வால்கர் மதுரைக்கு வருகை தந்து இருந்தால் அப்பொழுது முத்துராமலிங்கத் தேவரின் தோற்றம் அவ்வாறு இருக்கவில்லை. மீசை இல்லாமல், நீளமான தலைமுடியைக் கொண்ட தோற்றத்தில் இருந்து இருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் தேவரின் தோற்றம் குறித்த பல்வேறு புகைப்படங்கள் மற்றும் பர்மா சென்ற வீடியோ காட்சிகள் நமக்கு கிடைத்துள்ளன’‘. இவ்வாறு கூறியிருந்தது.

ஏதோ மனிதனுக்கு வருடத்தில் ஒருமுறைதான் மீசை வளரும் என்பது போன்ற இந்த பதிவு மீடியான் Fact Check குழுவின் கண்களில்பட்டது, உடனே இதுகுறித்து உண்மைகண்டறியும் முயற்சியில் மீடியான் இறங்கியதில் 8.03.1956 ம் வருடம் வெளிவந்த தியாக பூமி” எனும் பத்திரிக்கையின் 7,8 ஆகிய பக்கங்களில்

  • முத்துராமலிங்க தேவர் மற்றும் குரு கோல்வால்கர் ஆகியோர் சந்தித்தது
  • அந்த விழாக்குழு தலைவராக இருந்தவர் முத்துராமலிங்க தேவர் என்பதும்,
  • ஆர்.எஸ்.எஸ் கொள்கையுடன் தனது கருத்துக்கள் இசைந்து இருப்பதாக தேவர் அவர்கள் கூறிய கருத்தும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்து எழுதுவதையே தனது முழுநேர பணியாக கொண்டுள்ள அசுரன் BLOG எழுத்தாளரும் 2006 ஜூலை 31 ம் தேதி

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார்”

என்று தெள்ளத்தெளிவாக எழுதியுள்ளார்.

இப்படி பல ஆதாரங்கள் இருந்தும் அவற்றை மறைத்து தலை முடி, மீசை போன்றவற்றை எல்லாம் ஆதாரம் என எடுத்து கொண்டு திரியும் இதுபோன்ற போலி ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும்.

1 COMMENT

  1. YOU TURN காரனுக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருக்குமே………..
    (வெக்கம்,மானம்,சூடு,சொரண இதல்லாம் இருந்தா இருக்கும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here