பாரதத்தை இணைத்த புதிய பகீரதன்  பட்டேல் ..!

பாரதத்தை இணைத்த புதிய பகீரதன் பட்டேல் ..!

Share it if you like it

ஆங்கிலேயர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தை கண்டு மிரண்டுபோய் நம் நாட்டை விட்டு ஓடி விடலாம் என்று முடிவு செய்தபோது அவன் விதைத்த விஷ விதை சுதேச சமஸ்தானங்கள் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று. அந்த விஷ விதையை தன்னுடைய சாமர்த்தியத்தால் பிடிங்கி எறிந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

பட்டேல் பிரதமர் ஆகி இருந்தால் பாகிஸ்தான் வாலாட்டி இருக்காது – காஷ்மீர் முழுவதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும் என்பதை நாம் சிறிது தாமதமாகத்தான் புரிந்து கொண்டோம். துரதிஷ்ட வசமாக காந்திஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேருவுக்கு வழி விட்டு, வல்லபாய் படேல் ஒதுங்கினார்.

இந்தியாவுடன் இணைந்து விடுங்கள்” என்ற படேல் கோரிக்கையை, ஐதராபாத்தை ஆட்சி செய்த நிஜாம் நிராகரித்தார், மேலும் இந்தியாவுக்கு எதிராக”தனி படையை’ திரட்டினார். இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்ட நினைத்த நிஜாமுக்கு பாடம் கற்பிக்க பட்டேல் முடிவு செய்தார். “ஆப்பரேஷன் போலோ’ என்ற ராணுவ நடவடிக்கையை 1948, செப்.13ம் நாள் துவக்கினார். மூன்றே நாட்களில் பட்டேல் அவர்களிடம் ஹைதராபாத் ஒப்படைத்து மண்டியிட்டார் ஹைதராபாத் நிஜாம்.

தேசபக்தர், கடுமையான உழைப்பாளர், சிந்தனையாளர் நம் தேசத்தின் இரும்பு மனிதர் என சர்தார் வல்லபாய் பட்டேலை புகழ்ந்து கொண்டே போகலாம். இந்த மஹான் பிறந்த இந்த நாளை நாம் தேச ஒற்றுமை தினமாக கொண்டாடுவோம்.

– Anand T Prasad


Share it if you like it