பிரதாப்கட் போர் வரலாறு – வீர சிவாஜி

பிரதாப்கட் போர் வரலாறு – வீர சிவாஜி

Share it if you like it

போருக்கு செல்வதற்கு முன்பே தளபதிக்கு அதன் முடிவு தெரிந்துவிட்டது.

ஆம், தளபதி ‘அப்சல் கான்’ ஒரு ஜோதிட பைத்தியம். போருக்கு முன் ஜோதிடர்களை அழைத்து ஆலோசிப்பான். ஜோதிடர்கள் அனைவரும் சொல்லியது ஒன்றை தான்.

“சிவாஜியை எதிர்த்து யுத்தம் என்றால், உன் உயிர் மிஞ்சாது”.

பிஜாப்பூர் இராஜியத்திற்கு பெரும் பலமே தளபதி அப்சல் கான் தான். ஏழு அடிக்கு வெறும் மூன்று அங்குலமே குறைவு. பெரும் பலசாலி. உயிர் பயமெல்லாம் அவனுக்கு இல்லை. அவன் கவலை முழுக்க அவனது 60 மனைவிகளை நினைத்து தான்.

வீர சிவாஜி என்னை கொன்று பிறகு வேறு யாரும் என் மனைவிகளை நெருங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அவ்வளவும் அன்பு:

அதை வேறொருவர் உணர கூடாது. அதனால் அவனது 60 மனைவிகளையும் போருக்கு செல்வதற்கு முன்பு கொன்று விட்டான், அந்த காதல் கிறுக்கன். இனி அவனுக்கு காதல், மனைவி என்று எந்த கவலையும் இல்லை. மனம், சிந்தனை என்று மொத்தமும் சிவாஜி தான். சிவாஜி என்றாலே மகாராட்டிரம் அதிரும். அது வீரத்துக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. ஆட்சி செய்யும் திறமைக்கும் கிடைத்த வெற்றி.

கொரில்லா போர் யுக்தி. எத்தகைய படையையும் சிதறி ஓடும். அப்சல் கான் சிவாஜியை முதலில் மனதளவில் தாக்க தொடங்கினான். சிவாஜியின் குலதெய்வ ஆலயம் உட்பட சில இந்து கோவில்களை இடித்தான். அது சிவாஜியின் சினத்திற்கு மேலும் தீனி போட்டது. ஆனால் நிலை தடுமாறவில்லை.

அப்சல் கானின் பலம், திறந்த வெளியில் யுத்தம் செய்வது. சிவாஜியை அழிக்க அவன் படையில் ஒவ்வொரு வீரனையும் அவனே தேர்வு செய்தான்.

அது பெரும் படை:

யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, ஒட்டகங்கள், பீரங்கிகள், பெரிய துப்பாக்கிகள், சிறிய துப்பாக்கிகள் என அனைத்தும் அடங்கிய படை.

திறந்த வெளியில் அப்சல் கான் போன்ற தளபதியின் கீழ் இப்படி ஒரு படை என்றால் எதிரியின் நிலைமை என்ன ஆகும்.!

வீர சிவாஜியின் படை அதை விட சிறிது. ஆனால் கொரில்லா போர் முறையில் உலகத்தரம் வாய்ந்தவர்கள்.

திறந்த வெளி யுத்தத்திற்கு போக விரும்பவும் இல்லை. எதிரியை வர வைத்து அடிக்க வேண்டும். சிவாஜி தந்திரசாலி. பல யோசனைகள் செய்வார். பலரது கருத்தை கேட்டார்.

அதில் பெரும்பாலோர் சொன்னது, “அப்சல் கான் படையுடன் நேரடியாக கூட யுத்தம் செய்வோம். ஆனால் அவன் பேச்சுவார்த்தை என்று தனியே அழைத்தால் செல்ல வேண்டாம். அவன் ஒரு சூழ்ச்சிகாரன்”.

சிவாஜி ஆழ்ந்து சிந்தித்தார். போர் என்று சென்று அவனை அணுகுவது அவருக்கு சரி என்று படவில்லை. வேறு மாதிரி அவனை வெல்ல வேண்டும்.

‘ஒப்பந்த பேச்சுவார்த்தை’ செய்தி அனுப்பினார். அப்சல் கானுக்கு ஆனந்தம்.

சிவாஜியை எதிர்த்து போர் புரிந்தால் மரணம் என்ற ஜோதிடர்கள் வார்த்தைகள் அவன் மண்டையை தட்டியதால் அந்த ஆனந்தம். ஆனால் சிவாஜியை வெல்ல வேண்டும். இல்லை கொல்ல வேண்டும்.

பேச்சுவார்த்தை என்ற போர்வையில் துரோக கொலை அப்சல் கானுக்கு புதிதல்ல. ஆனால் அந்த திட்டம் சிவாஜியின் காதுக்கு எட்டியது. சங்கிலி உடையை தனக்கு அரணாக்கினார் சிவாஜி. அதிசிறந்த கூடாரம் பிரதாப்கட்டில் அமைக்கப் பட்டது.

ஆளுக்கு 10 காவலர்கள் மட்டுமே அனுமதி:

பேச்சுவார்த்தையும் முடிந்தது. அப்சல் கான் சிவாஜியை கட்டியணைத்த போது ஒரு கை சிவாஜியின் கழுத்தை இறுக்கியது. இன்னொரு கை குறுங்கத்தியால் சிவாஜியை குத்தியது.

இரத்தம் வரவில்லை. இரும்பு சங்கிலி அரண் கத்தியை தடுத்துவிட்டது. அப்சல் கான் அதை உணரும் முன்பே, புலி நகத்தால் அப்சல் கானின் வயிற்றை கிழித்து குடல் அளவை பார்த்துவிட்டார் அந்த வீரப்புத்திர சிவாஜி.

அவ்வளவு தான் அடுத்த சில நிமிடத்தில் அப்சல் கானின் தலை துண்டிக்கப்பட்டது. தளபதி இல்லாத படை எதற்கு உதவும். அந்த பெரும்படையை மராட்டியர்கள் சின்னாபின்னமாக்கினர்.

அந்த வரலாற்று தினம் இன்று.

நவம்பர் 10. பிரதாப்கட் போர்.

– Dina K S


Share it if you like it