திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன். வரும் சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், திமுக மாபெரும் வெற்றி பெறாவிட்டால். தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அண்மையில் பகீரங்கமாக சவால் விடுத்து இருந்தார்.
இன்று புதுவையில் காங்கிரஸ் அரசு தனது ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் தி.மு.க எம்.எல்.ஏ-வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்..
புதுவை மக்களை நம்ப வைக்கும் விதமாக. தி.மு.க தனது கட்சி எம்.எல்.ஏ-வை தற்காலிகமாக நீக்கியுள்ளது. புதுவையில் ஆட்சி கலைப்பிற்கு பின்னால் நிச்சயம் ஜெகத்ரட்சகன் உள்ளார் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.