புதுவையில் தாமரை மலர்வது உறுதி…!

0
334
புதுவையில் தாமரை மலர்வது உறுதி...!

புதுவை யூனியன் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டியவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நமச்சிவாயம்.. ஆனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி புதுவை முதல்வராக நாராயணசாமி அப்பதவியில் அமர்ந்து கொண்டார்…

முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து நாராயணசாமி போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறி சென்றதால் .. காங்கிரஸ் கட்சியில் உள்ள பல மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வெளிப்படையாகவே முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவிக்க துவங்கினர்..

உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக துவங்கியுள்ளனர் என்பதற்கு நமச்சிவாயம் விலகலே மற்றொரு சான்று..

உரிய முக்கியத்துவம் கிடைப்பதால் மாற்று கட்சியில் இருந்து பலர் பா.ஜ.க-வை நோக்கி தற்பொழுது வர துவங்கியுள்ளனர் என்பது நிதர்சனம்..

அந்த வரிசையில் நமச்சிவாயம் அவர்களும் கூடிய விரைவில் பா.ஜ.க-வில் இணைய போவதாக தகவல் வெளி வருகின்றது. புதுச்சேரியில் வெகு விரைவில் பா.ஜ.க தலைமையில் நல்லாட்சி அமையும் என்று புதுவை மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here