பெண் பத்திரிக்கையாளருக்கு கொடூர தண்டனை வழங்கிய சீனா வாய் திறப்பாரா அருணன்?

0
1527
பெண் பத்திரிக்கையாளருக்கு கொடூர தண்டனை வழங்கிய சீனா வாய் திறப்பாரா அருணன்?

 

மூச்சு விடும் சுதந்திரத்தை தவிர எழுத்துரிமையோ, பேச்சுரிமையோ, எதுவும் சீனாவில் கிடையாது என்பது அனைத்து தரப்பு மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.. அண்மையில் சீன வைராலஜிஸ்ட் யான் அவர்கள் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்…

சீன அதிகாரிகளுக்கு இந்த கொடிய வைரஸ் பரப்புவதை பற்றி முன்பே தெரியும் என்று நான் நம்புகிறேன். கொரோனா வைரஸின் வீரியத்தை சீன அரசாங்கம் டிசம்பர் மாதம் முதலே நன்கு உணர்ந்து இருந்தது. ஆனால் அதனை உலக நாடுகளுக்கு தெரியாமல் பார்த்து கொண்டது.

மனிதனுக்கு மனிதன் இத்தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. பல உயிர்களை காக்க முடியும் என்கின்ற எனது ஆய்வை மேற்பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். பல சீன விஞ்ஞானிகள் வைரஸ் குறித்து பொதுமக்களை எச்சரிக்க முயன்றனர்.

ஆனால் அவர்களின் குரல் ஒலிக்காமல் அரசாங்கம் பார்த்து கொண்டது. மற்றவர்களும்  இந்த விஷயத்தை பற்றி வெளியில் பேச கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். ஆனால் முககவசம் மட்டும் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்…

உண்மையை கூறிய சீன வைராலஜிஸ்ட் யான் நிலைமை என்னவென்பது தற்பொழுது வரை மர்மமாக உள்ள நிலையில் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்த சீன பெண் பத்திரிக்கையாளருக்கு 5 ஆண்டுகள் கொடூர தண்டனையை அந்நாடு வழங்கியுள்ளது..

எதற்கெடுத்தாலும் மோடி, மோடி, என்று மந்திரம் ஜெபிக்கும் அருணன் ஜின்பிங்கிற்கு எதிராக கருத்து தெரிவிப்பாரா என்று நெட்டிசன்கள் அவரிடம் உண்டியல் குலுக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here