போலி தமிழ் போராளிகளின் செவிலில் ”பளார்’ -முத்தையா முரளிதரன்..!

போலி தமிழ் போராளிகளின் செவிலில் ”பளார்’ -முத்தையா முரளிதரன்..!

Share it if you like it

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும், இலங்கை மக்களால் இன்று வரை கொண்டாடப்பட கூடியவராக திகழ்கிறார் தமிழ் பேசும் முத்தையா முரளிதரன். இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து நடிகர் விஜய் சேதுபதி 800 என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.. இதற்கு தமிழ் பிரிவினைவாதிக்கள் மிக கடுமையான எதிர்ப்பினை நடிருக்கு தெரிவித்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து முத்தையா முரளிதரன் கடிதம் ஒன்றினை 16.10.2020 அன்று வெளியிட்டு உள்ளார். அக்கடித்ததில் இருந்து சிலவற்றை பார்ப்போம்..!

  • என்னை பற்றிய திரைப்படத்திற்கு முதலில் நான் தயங்கினேன், இதற்கு பின்னால், என் பெற்றோர், ஆசிரியர், பயிற்சியாளர்களுக்கு, ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இதற்கு சம்மதித்தேன்..
  • இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்கள் வாழ்க்கை பயணத்தை துவக்கியது.. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள் தான்..
  • என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகியுள்ளனர்.. வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம்..
  • முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியிலேயே தான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது.
  • ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள் போர் சூழ்நிலைலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது.
  • எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன் நான்…
  • எனக்கு தமிழ் தெரியாது என்பது  தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வுமனப்பான்மை உடையவர் என முரளி கூறுகிறார் என சொல்கின்றனர். இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால் எல்லோரிடமும் ஒரு தாழ்வுமனப்பான்மை இருந்தது காரணம் எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில் தான் இருந்தார்கள்..
  • அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில்  என்னை பங்கேற்க தூண்டியது.. எனது முயற்சியால் அணியில் சேர்ந்தேன் எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க  இயலாதவனாக மாறினேன்.
  • என்னை பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும், மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன்..
  • மலையக தமிழனான நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம்.. செய்யும் நன்மைகளை சொல்லிக்காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை ஆனால் இன்று அதை சொல்லியாக தான் வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்..
  • ஜ.நா. வின் உணவு தூதராக இருந்தபொழுது 2002 ஆம் ஆண்டு LTTE-யின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த திட்டத்தை எடுத்து சென்றது முதல் பின் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் நன்கு அறிவர்.
  • போர் முடிவுற்ற பின் கடந்த பத்து வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான FOUNDATION OF GOODNESS  மூலம் ஈழமக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்றேற்றம், மருத்துவம், என பலவகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன்.. இன்னும் இது போல் ஏராளமானவை உள்ளன.
  • நான் இலங்கை அணியில் இடம் பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம் பெற முயற்சித்திருப்பேன் இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?
  • சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணத்திற்காகவும், என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது..
  • எவ்வளவு விளக்கமளித்தாலும், எதிர்ப்பாளர்கள், யாரையும் சமாதானப்படுத்த முடியாது. என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்.

தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் போலி அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடியாக முத்தையா முரளிதரன் அறிக்கை வெளிவந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it