முரளிதரன் ஆளுநராக நியமனம்

0
328
முரளிதரன் ஆளுநராக நியமனம்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, முரளிதரனை ஆளுநராக நியமனம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற இவரின் சாதனையை யாராலும் இன்னும் நெருங்க இயலவில்லை. முரளிதரனின் முன்னோர்கள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு சென்னையை சார்ந்த மதிமலர் என்பவரை முரளிதரன் திருமணம் செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here