மூன்று கட்டமாக நடக்க இருக்கும் பீகார் சட்டசபை தேர்தல்

0
1365

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் ஆட்சி நடந்து வருகின்றது. அங்கு ஐந்து வருட பதவிக் காலம் நவம்பர் 29 அன்று நிறைவடைவதையொட்டி, தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை இன்று அறிவித்தது.

செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதி, தேர்தல் நடக்கும் எனவும், ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடக்கும் எனவும் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here