வரலாற்று தீர்ப்பு – இந்து முன்னணி

0
200
வரலாற்று தீர்ப்பு - இந்து முன்னணி

அயோத்தி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை பிவ்ருமாறு;

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை ஹிந்து முன்னணி வரவேற்கிறது. குறிப்பாக ஐந்து நீதிபதிகளும், மக்கள் மனதையும் சட்ட வரம்புகளையும் மத நல்லிணக்கத்தையும் கருத்தில்கொண்டு சொல்லப்பட்ட தீர்ப்பாக இந்து முன்னணி கருதுகிறது. இந்தத் தருணத்தில் இந்த ஒரு நல்ல தீர்ப்புக்காக பல ஆயிரம் பேர் தங்கள் உயிரை பலி தந்துள்ளனர்.

அவர்களின் தியாகங்கள் நினைவு கூறுவது மிக அவசியம். இந்த நேரத்தில் பொதுமக்களும் அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் ஊடகங்களில் தேசிய ஒருமைப்பாட்டையும் மதத்தையும் காப்பதில் கவனமாய் இருக்க வேண்டும். ஐந்து நீதிபதிகள் சொன்ன இந்த மகத்தான தீர்ப்பை சிலர் வேண்டுமென்றே திரித்துக் கூறுவது நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது ஆகும். இத்தகைய கேவலமான செயல்களை செய்பவர்களை காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் அவர்களது கருத்துக்களை புறம் தள்ள வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here