வேளாண் சட்டம் குறித்து சர்வதேச பொருளாதார நிபுணர் கருத்து..!

வேளாண் சட்டம் குறித்து சர்வதேச பொருளாதார நிபுணர் கருத்து..!

Share it if you like it

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள்., மக்கள் மத்தியில் தவறான கருத்தினை கூறி., இன்று வரை அவர்களை குழப்பி வருகின்றனர்.. இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..
  • இந்தியாவில் வேளாண் துறையில் சீர்த்திருத்தங்கள் அவசியம் தேவை.
  • புதிய வேளாண் சட்டத்தின் மூலமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு அவர்களின் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும்..
  •  புதிய சட்டங்கள் வாயிலாக, அரசு நடத்தும் மண்டிகள் மட்டுமில்லாமல் தனியாரிடமும் வரியை செலுத்தாமல் விவசாயிகள் எளிதில் தங்கள் பொருட்களை விற்க முடியும்.

 

2021 – 2022-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.5  விழுக்காடு உயரும் என்று கணித்துள்ளது.. இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி விகிதத்தை எட்டக் கூடிய உலகின் ஒரே நாடாக இந்தியா மாறும் என்றும்.. சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் இருக்கும் என்று அண்மையில் IMF அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it