தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட டென்னிஸ் செயற்கை இலை மைதானத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சமீபத்தில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டுமென மேடையில் பேசியது கண்டனத்திற்கு உரியது என்றார்.