ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கேள்வி பதில்கள்

0
274
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கேள்வி பதில்கள்

ஆன்மிககுருவும், வாழும்கலை நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது சீடர்களின் பல கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்தார். சிறந்த குருவை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்? என்ற வினாவிற்கு பதிலளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் குருவை போற்றுவதைவிட அவரின் எண்ணத்தை நிறைவேற்றுவதே நாம் அவருக்கு செய்யும் தொண்டு என்றார்.

மேலும் ஹிந்து தர்மத்தை தவறுதலாக எண்ணுபவர்களை என்ன செய்யவேண்டும் என்ற வினாவிற்கு ஹிந்து தர்மத்தை தவறாக பேசுபவர்கள் பள்ளியின் முதல் வகுப்பில் படிப்பவர்கள் போன்றவர்கள் அவர்களுக்கு ஹிந்து தர்மத்தின் பெருமைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஹிந்து தர்மத்தை கற்று அதனை பின்பற்றுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் போன்றவர்கள். அதனால் நாம் அவர்கள் கூறுவதை பெரிதாக எண்ண வேண்டாம். மேலும் நாம் கோவில் செல்வதோடு நிற்கக்கூடாது யோகாசனங்கள் செய்யவது திருமந்திரம் படிப்பது ஆகியவற்றை படிக்கவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here