பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த நீடா சோதா என்ற பெண், குடியுரிமை கிடைத்ததை தொடர்ந்து ராஜஸ்தானில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.
ராஜஸ்தானின், நட்வாரா பஞ்சாயத்திற்கு நடக்கும் தேர்தலில், போட்டியிடும் நீடா சோதா கூறுகையில், எனது மாமனார் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து தீவிரமாக பணியாற்றினார். எனது அரசியல் வாழ்க்கைக்கு வழிகாட்டினார். 18 ஆணடுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தேன். 4 மாதங்களுக்கு முன்பு தான் இந்திய குடியுரிமை கிடைத்தது. தற்போது பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறேன்.
கிராம பெணகள் முன்னேற்றத்திற்கு என்னால் முயன்ற முயற்சியை செய்வேன். சிறந்த கல்வி மற்றும் மருத்துவமனை கொண்டு வர பாடுபடுவேன். பெண்கள் வளர்ச்சிக்கும், கிராமம் வளர்ச்சி பெறவும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க பாடுபடுவேன். பாகிஸ்தானை விட இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த கல்வி மற்றும் உகந்த சூழ்நிலை நிலவுகிறது. நான், இங்கு வந்தது முதல், மக்கள் அதிகளவு ஆதரவு கொடுத்தனர். இதனால், என்னால் முன்னேற முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.