அமலுக்கு வந்தது, குடியுரிமை திருத்த மசோதா

அமலுக்கு வந்தது, குடியுரிமை திருத்த மசோதா

Share it if you like it

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் குடியுரிமை திருத்த மசோதாவானது அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டபின், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது அதற்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாக ஏற்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 18 தேதிக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சார்த்த சிறுபான்மையின மக்கள் குடியுரிமை பெறுவார்கள். குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it