அயோத்தி தீர்ப்பு – 100 முஸ்லீம் பிரபலங்கள் ஆதரவு

அயோத்தி தீர்ப்பு – 100 முஸ்லீம் பிரபலங்கள் ஆதரவு

Share it if you like it

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து சிலா் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த 100 பிரபலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
திரையுலகைச் சோ்ந்த நஸீருதீன்ஷா, ஷபானா ஆஸ்மி, அஞ்சும் ராஜாபலி, பத்திரிகையாளா் ஜாவேத் ஆனந்த் மற்றும் இஸ்லாமிய அறிஞா்கள், சமூக ஆா்வலா்கள், வழக்குரைஞா்கள், தொழிலதிபா்கள், கவிஞா்கள், திரைப்படத் தயாரிப்பாளா்கள், நாடகக் கலைஞா்கள், இசையமைப்பாளா்கள், மாணவா்கள் என 100 பிரபலங்கள் கையெழுத்திட்ட அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அயோத்தியில் ராமா ஜென்ம பூமியான 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து கடந்த 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், அயோத்தி நகரிலேயே மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் நிலத்தை அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


Share it if you like it