அயோத்தி வழக்கு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி

அயோத்தி வழக்கு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி விவகாரத்தை, அமைதியான முறையில் பேசித் தீர்க்க அமைக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை, ஆகஸ்ட் முதல், நாள் தோறும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களில் ஒருவரான, கே.என்.கோவிந்தாச்சார்யா, ‘அயோத்தி வழக்கின் விசாரணையை, ‘வீடியோ’ பதிவு செய்ய வேண்டும்; ‘டிவி’யில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்’ எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுக்கு அனுப்பி வைத்தது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ. நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.

அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சம்மதம் தெரிவித்தது. மேலும், அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு, எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, உச்சநீதிமன்ற பதிவாளருக்கு, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.


Share it if you like it