அரசு நிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கை. மக்களுக்கு என்ன நன்மை? பொருளாதாரம் வளருமா?

அரசு நிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கை. மக்களுக்கு என்ன நன்மை? பொருளாதாரம் வளருமா?

Share it if you like it

நிதியமைச்சர் அறீவித்த வங்கி நிறுவனங்கள் இணைப்புத்தான் பெரிதாக பேசப்படுகிறது. ஆனால் ரயில்வே தயாரிப்பு நிறுவனங்கள், ராணுவ தளவாடங்கள் நிறுவனங்கள் போன்றவற்றை இணைக்க அரசு எடுத்த நடவடிக்கை பெரிதாக பேசப்படவில்லை.

வங்கி ஊழியர்கள் இப்போது தான் வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள் ஆனால் அந்த நிறுவனங்களிலே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம அறிவித்து அதை திரும்பவும் பெற்று வேலையும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

முதல்ல இந்த மத்திய அரசு நிறுவனம் அப்படீன்னா என்னன்னு பார்க்கனும். மத்திய அரசு மொத்தமாக 500க்கும் நிறுவனங்கள் நடத்துது (முழுமையாக கணக்கு எடுக்கமுடியல). இது முறைப்படியான நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டவை. இந்த ஸ்டேட் பேங்க், ஓரியண்டல் இன்சூரஸ், எல் ஐ சி, ஒன் ஜி சி என ஏகப்பட்ட துறைகளிலே கம்பெனிகள்.

இது இல்லாம பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் தளவாட தயாரிப்பு தொழிற்சாலைகள், ரயில்வேயின் கீழ் இயங்கும் தயாரிப்பு தொழிற்சாலைகள், உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என ஏகப்பட்டவை உண்டு. இவை நிறுவனங்களாக இல்லாமல் தனியே அந்தந்த துறைகளின் கீழே நிர்வகிக்கப்படுவை. முன்னாடி இந்த டெலிகாம் டிபார்ட்மெண்ட் இருந்தது இல்லையா அந்த மாதிரி.

சரி இப்போ என்ன பிரச்சினை, மோடி அரசு என்ன சீர்திருத்தம் செய்யுது, எதுக்கு இணைக்கனும் அல்லது பிரிக்கனும்?

முதல் பிரச்சினை பணம் எப்படி செலவழிக்கப்படுது? எவ்வளவு நட்டம்? லாபம் அப்படீன்னே எடுக்கறது கஷ்டம். இப்பக்கூட என்னாலே உடனடியாக எவ்வளவு பொதுத்துறை நிறுவனங்கள் இருக்குதுன்னு எடுக்கமுடியல.

இரண்டாவது பிரச்சினை நட்டம். வருசத்துக்கு கிட்டதட்ட லட்சம் கோடிகள் நட்டம் என அள்ளிவிட்டுக்கொண்டு இருந்தாங்க. சில பல வருடங்களிலே வருசத்துக்கு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடின்னெல்லாம் நட்டம் காமிச்சுட்டு இருந்தாங்க. இப்பவும் 52 பொதுத்துறை நிறுவனங்களின் போன வருடம் நட்டம் 32,000 கோடி. அதுக்கு முன்னாடி 93 கம்பெனிகள் 67,000 கோடி நட்டம் காமிச்சது. இது பட்ஜெட்டிலே சொல்லி தெரிவது தான். வேறு மாதிரி வழிகளிலே அதாவது கடன் வாங்கினதிலே எத்தினி லட்சம் கோடி நட்டமோ?

மூணாவது பிரச்சினை செய்யும் வேலையையும் ஒழுங்கா செய்யறது இல்லே, புதுசா கண்டுபிடிக்கறது இல்லை, ஏற்றுமதி செய்யனும் பயன்படுத்துவோருக்கு அதிகம் பயன்படுமாதிரி செய்யும் அப்படீன்னு ஏதும் கிடையாது. ரயில்வே பெட்டி தொழிற்சாலையை எடுத்துட்டா இதை தெளிவா பார்க்கலாம். ராணுவ தளவாடங்களிலே ஒரு வண்டிகூட இந்த நிறுவனங்கள் தயாரிப்பதில்லை அதெல்லாம் இறக்குமதி செய்யறோம்.

இதையெல்லாம் விட பெரிய மாபெரும் பிரச்சினை ஊழலின் கறுப்பு பணத்தின் ஊற்றுக்கண்ணே இந்த பொதுத்துறை நிறுவனங்கள் தான்.

காண்டிராக்ட்வேலைகளை கட்சிக்காரர்களுக்கு கொடுப்பதிலே ஆரம்பித்து தரம் குறைந்த பொருட்களை தயாரித்து விற்பதிலே இருந்து விஞ்ஞான ஊழல் வரைக்கும் முன்பு இருந்த கட்சிகளுக்கு பணத்தை சுழற்சியிலே விடுவதே இந்த கம்பெனிகளும் தொழிற்சாலைகளும் தான்.

விஞ்ஞான ஊழலுக்கு மிக அருமையான உதாரணம் யூரியா ஊழல் தான். அரசு மானியம் கொடுத்து யூரியா தயாரித்து விவசாயிகளுக்கு கொடுக்கும் என்பது தான் வெளியிலே சொல்லப்படும். இவிங்க என்ன பண்ணுவாங்க அதை தனியார் கம்பெனிகளுக்கு மற்றவேலைகளுக்கு வித்திடுவாங்க. விவசாயிகளுக்கு ஏதும் கிடைக்காது. பல மாநிலங்களிலே இந்த ஊழலிலே தான் கான்கிரஸ் ஆட்சியே நடத்துச்சு.

சரி இதிலே இணைப்பு எங்கே வருது என்ன பண்ணுதுன்னா அதை இணைப்பு என பார்க்காம சீர்திருத்தம் என பார்க்கனும். ஏன்னா வங்கிகள் இணைப்பிலே கூடவே ஏகப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது இணைப்பு என்பது அறிவிக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களின் ஒரு நடவடிக்கை அவ்வளவு தான்.

ஆட்சிக்கு வந்தவுடனே மோடி செய்த முதல் காரியம் எல்லோருக்கும் வருகைப்பதிவை கட்டாயமாக்கியது தான். அது அப்படியே படிப்படியாக மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசு ஊழியம் செய்வதாக காட்டிக்கொண்டு வேறு ஊழியம் செய்யும் ஊழியர்கள் மோடி மேல் வெறுப்பை கக்குவது இதனால் என சொல்லித்தெரியவேண்டியதில்லை.

அடுத்த சீர்திருத்தம் வாங்கும் பொருட்களுக்கு வெளிப்படையான ஒரே இடத்திலே டெண்டர் எனும் முறையை கொண்டு வந்தது. இது இப்போது எல்லா அரசு நிறுவனங்களுக்கும் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மூன்றாவது சீர்திருத்தம் வேலைவாய்ப்பிலே. இது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கிறது.

இப்போது நடக்கும் இணைப்பு போன்ற மறுகட்டமைப்பு சீர்திருத்தங்கள் தான் வெளியே தெரியும் அளவுக்கு பேசப்படுகின்றன.

இதிலே முக்கியமானது யாருக்கு என்ன பொறுப்பு, யார் யாரை கண்கானிப்பது, தவறு நடந்தால் யார் பொறுப்பேற்பது என்பது தான்.

இந்த வங்கி சீர்திருத்தத்திலே முக்கியமானது இது தான். வங்கி நிர்வாக அமைப்பு யாரை கண்கானிக்கும் என்பதிலே இருந்து வங்கி மேலாளர்கள் எதுக்கு பொறுப்பு என்பது வரை சொல்லப்பட்டுள்ளது.

இதே போல் தான் தொழிற்சாலைகளிலே செய்யப்படும் சீர்திருத்தங்களும். அதிலே இருக்கும் பிரச்சினைகளான ஒரே வேலையை பல தொழிற்சாலைகளை பலவாறு செய்வது என ஆரம்பித்து ஒரே வேலைக்கு பல தொழிற்சாலைகள் டெண்டர் போடுவது என்பது வரை பல குழப்படிகள் இருப்பதால் அவற்றை இணைத்து ஒரே நிறுவனம் ஆக்குவதன் பல நன்மைகள் உண்டு.

இப்போது ஒரு வால்பெட்டி (ரயில்பெட்டி) ஏற்றுமதி செய்யவேண்டும் என்றால் இந்த தனி தனி தொழிற்சாலைகள் தனியாகவே போட்டி போடும். இதனால் விலையும் ஏற்றுமதியும் பாதிக்கப்படும். மற்ற நாடுகளோ இதுக்கெல்லாம் ஒரே கம்பெனி தான் வைச்சிருப்பாங்க. அதனாலே அவிங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் நமக்கோ இருக்காது. மோடி அரசு வந்ததுக்கு அப்புறம் தான் நாம ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வால்பெட்டிகள் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தோம்.

இணைப்பு என்பது ஒருவகை சீர்திருத்தம் என்று தான் பார்க்கவேண்டும்.

ரயில்பெட்டிகளிலே இப்படீன்னா ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் இடங்களிலே இதை விட நிலை மோசம். உள்ளூக்குள்ளே அடிதடிகள், ராணுவம் கேட்பதை செஞ்சு கொடுக்கமாட்டாங்க. அரசு நிறுவனம் என்பதால் வெளியே போய் வாங்கவும் முடியாது. முக்கியமான பொருட்களை வெளியே வாங்க கூடாதுன்னும் இருக்கு.

வங்கிகள் நிலையோ படுமோசம்.

என்ன பிரச்சினை என தனியாக தொழில் செய்பவர்களுக்கே புரிவதில்லை. இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்.

தபால் துறை மற்றும் ரயில்வே எடுத்துக்கோங்க.

இப்போ எல்லா இடங்களும் ஒரே ரயில்துறை இல்லாம வேற வேற நிறுவனங்கள் இருக்குன்னு வைச்சுக்கோங்க. மதுரைக்கு போகனுமின்னா திருச்சி வரைக்கும் ஒரு ரயில் அதுக்கப்புறம் இறங்கி மதுரை வரைக்கும் இன்னோர் ரயில்ன்னா எப்படி இருக்கும். அப்படித்தான் இந்த தனித்தனியா கம்பெனிகள் இருப்பது.

வங்கிகளிலே இந்த பிரச்சினை எப்படீன்னா வங்கிக்கு ஒரு முறை இருக்கும், காசோலை எடுக்கறதிலே இருந்து கடன் கொடுக்கறதிலே இருந்து. சரி அது கூட பரவாயில்லைன்னா வாங்கின கடனை அடைச்சதுக்கு அப்புறம் கொடுத்த ஆவணங்களை திரும்ப வாங்குறது இருக்கே அதுக்குள்ளே சோலியே முடிஞ்சிடும்.

இந்த பிரச்சினைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமா எல்லாருக்கும் ஒரே மாதிரியான நடைமுறைகளை அறிவிச்சிட்டு வருது.

நிர்மலா சீதாராமன் அறிவிச்சதிலேயும் சிறு குறு தொழில்களுக்கு கடன் கொடுப்பது, கடன் பாக்கியை எளிதாக கட்டுவதிலே இருந்து கடன் ஆவணங்களை திரும்ப தருவதிலே வரைக்கும் நெறிமுறைகள் இருக்கு.

கவனிங்க எப்படி வங்கியை இயக்குவதுன்னு 2019 இல் அரசு அதுவும் நிதியமைச்சரே நேராக அறிவிக்கவேண்டிய நிலையிலே வங்கிகள் இருக்குதுன்னு.

அங்கே லட்சக்கணக்கிலேயும் கோடிக்கணக்கிலேயும் சம்பளம் வாங்கும் ஆட்களுக்கு வங்கியை இயக்க தெரியல, பொதுமக்களூக்கு சேவை செய்யலன்னு சொல்லவேண்டியிருக்குதுன்னா இதுக நடத்தின லட்சணம் எப்படீன்னு புரிஞ்சுக்கோங்க.

இதைவிட முக்கியமான விஷயம் 250 கோடிக்கும் மேலான கடன்களை கண்கானிக்க குழு அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே ஒரு கேள்வி வரும் இதெல்லாம் உடனடியாக செய்ய முடியாதா ஏன் செய்யலன்னா சட்டப்படி இருக்கும் இடியாப்ப சிக்கல்கள் தான்.

ரிசர்வ் வங்கி தான் வங்கிகளை கண்கானிக்கும் அமைப்பு ஆனா அதுவந்து ரிசர்வ் வங்கியின் தான்தோன்றித்தனமாக அதிகாரம் தான். அதாவது இஷ்டமின்னா செய்யலாம் கஷ்டமின்னா விட்டுடலாம்.

அந்த வங்கிகளை தணிக்கை செய்யவோ அதை கண்கானிக்கவோ இதுவரைக்கும் அமைப்புகள் கிடையாது. ஏன்னா அது அப்படித்தான் என இதுவரைக்கும் இருக்கும். அதை தாண்டி ரிசர்வ் வங்கி ஏதாச்சும் செஞ்சா உடனே உச்ச பஞ்சாயத்திலே போயி தடை வாங்கிடறது.

நீதிமன்றம் எதிலே தலையிடலாம் எதிலே தலையிடக்கூடாது என்றோ வழக்கு விசாரணை இவ்வளவு நாட்களிலே முடியனும் என்றோ ஏதும் கிடையாது.

விஜய் மல்லையா வழக்கிலே நாலு வருசம் சென்னை உயர்நீதிமன்றம், கல்கத்தா உயர்நீதிமன்றம் என இழுத்தது யாருக்கும் நினைவில்லைன்னு நினைக்கறேன்.

ஒரு தனியார் வங்கின்னா இதையெல்லாம் அவிங்களே செஞ்சிடுவாங்க. எகா ஹெச்டிஎப்சி வங்கி. ஏன்னா அவிங்களுக்கு நட்டமின்னா அரசுட்ட போய் பணம் கேட்கமுடியாது. ஆனா அரசு வங்கி ஊழியர்களுக்கு நட்டமானாலும் கவலை இல்லை காரணம் நம்மோட வரிப்பணத்திலே ஆட்டைய் போட்டுடலாமே?

எனவே இதை ஒவ்வொன்னாத்தான் சமாளிக்க முடியும். அதே நேரத்திலே இருக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்தவும் முடியாது கூடாது.

சரி இதனாலே வேலை இழப்பு வருமான்னா வரும். கண்டிப்பாக தேவையில்லாத வேலைகளும் அதுக்கு நம்முடைய வரிப்பணத்திலே இருந்து சம்பளம் கொடுப்பதும் நிற்கும்.

ஆனால் சரியான நபர்களுக்கு கடன்கள், முறையான சீரான வங்கி இயக்கம் என்பதால் வேலை வாய்ப்பு பெருகும்.

என்னைக்கேட்டால் இந்தியா முழுக்க ஒரே அரசு வங்கி இருக்கலாம் அல்லது துறைகளுக்கு ஏற்ப தனி வங்கிகள் இருக்கலாம். பொதுமக்கள் மற்றும் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி, கம்பெனிகளுக்கு ஒரு வங்கி, கடன் கொடுக்க ஒரு வங்கி, ஏற்றுமதி விஷயங்களுக்கு ஒரு வங்கி என மாற்றிவிடலாம். ஒரே வங்கியிலேயே எல்லாவற்றையும் செய்வதற்கு அவரவருக்கு என்ன தனிப்பட்ட தன்மையோ அதைமட்டும் செய்தால் போதும்.

கம்மினிச கம்மினாட்டி யூனியன்கள் இதுக்கு தெரிவிப்பாங்களான்னா கண்டிப்பாக. ஆனா ரொம்பவும் பெரிசா இருக்காது.

பொருளாதாரம் வளருமான்னா, வளரும். எங்கே போயிடுது? சில பல சிக்கல்கள் இருப்பது உண்மை தான் ஆனா அரசு அதுக்கு ஏத்த படி வேலை செஞ்சுட்டு தான் இருக்குது.

கடன்கொடுப்பதிலே இருக்கும் நடைமுறை சிக்கல்களை நீக்கினாலே வளரும் என்பதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருது.

வருமான வரியை குறைப்பதற்கும் ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன. அதிலேயும் அரசு சீக்கிரம் முடிவெடுக்கும்.

சுருக்கமாக

வங்கிகள் இணைப்பு என்பது எல்லா அரசுத்துறை நிறுவனங்களிலே நடக்கும் சீர்திருத்தங்களின் ஒரு சிறு பகுதி தான்.

வங்கிகளை சரியாக இயக்க அரசு பல முடிவுகளை அறிவித்து உள்ளது அவை தான் முக்கியம்.

வங்கிகள் ஒழுங்காக இயங்குவதால் பொது மக்களூக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

பொருளாதாரத்தை சீர்திருத்த அரசு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு இருக்கிறது

-ராஜா சங்கர்


Share it if you like it