அண்மையில் மும்பை பால்கர் அருகே இரண்டு ஹிந்து துறவிகளை மதவெறி பிடித்த கும்பல் கொடூரமாக கொலை செய்த காட்சி நாடு முமுவதும் பலரையும் ரத்த கண்ணீர் வடிக்க வைத்தது. இதற்கு வழக்கம் போல் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், அரசியல்வாதிகள், மெளன நிலைக்கு சென்று விட்டது.
இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும், உள்ள ஊடகவியலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் அர்னாப் கோஸ்வாமி. இவர் சாதுக்கள் விவகாரத்தில் பலரின் முகத்திரையை கிழிக்கும் வகையில், பல கேள்விகளையும், தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும், விதமாக இவ்வாறு கூறியிருந்தார்.
இத்தாலி ரோம் நகரிலிருந்து வந்த அன்டோனியா மைனோ (சோனியா காந்தி) கிறிஸ்துவர் கொல்லப்பட்டு இருந்தால் இதுபோல அமைதியாக இருந்திருப்பாரா?
இந்து துறவிகளின் கொடூரமான கொலையை மூடி மறைக்க நினைக்கும் ஊடகங்களே நீங்கள் வெட்கப்பட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
வழக்கம் போல தனது காரில் வீட்டிற்கு, செல்லும் பொழுது காங்கிரஸ், கட்சியை சார்ந்தவர்கள் அவரின் காரை வழி மறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தன் மனைவியுடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையின் உயர் அதிகாரிகள், அவரிடம் எழு மணி நேரம் விசாரணை என்ற பெயரில், அர்னாப்பை கொடுமைப்படுத்தி இருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும், டுவிட்டரில் நெட்டிசன்கள் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.