அறநிலையத்துறையின் அறமற்ற செயல் – கோவில் நிதி காப்பாற்றப்பட்டது !

அறநிலையத்துறையின் அறமற்ற செயல் – கோவில் நிதி காப்பாற்றப்பட்டது !

Share it if you like it

  • கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி இந்து அறநிலைத்துறை சட்டத்திற்குப் புறம்பாக இந்து கோயில்களில் சுமார் 47 கோவில்களில் இருந்து 10 கோடி ரூபாய் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு பயன்பாடு சம்பந்தமாக மாற்ற செயலாணை பிறப்பித்தார். இந்து அறநிலை துறையின் முதன்மைச் செயலாளர் உத்தரவை எதிர்த்து ஹிந்து மதத்தை சேர்ந்த வழக்கறிஞர்களால் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் WP.No 7568 of 2020 இன்று மனுவினை விசாரித்ததில் மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டது. அரசாங்கத்தின் செயல்பாடு தவறானது எனவும் அதனை அரசு வாபஸ் பெறுவதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார். மேலும் பிராமண பத்திரம் வரும் வெள்ளிகிழமை அன்று தாக்கல் செய்வதாக கூறினார்.
  • சமீபத்தில் பாஜக எம்.பி தருண் விஜய் அவர்கள் ஹிந்துக்களின் கோயில் நிதியானது மதமாற்றங்களைத் தடுத்தல், குழந்தைகளிடையே ஹிந்து தர்மத்தை பற்றிய புரிதலை வலுப்படுத்துதல், சில தீயவர்களின் அட்டூழியங்களுக்கு பலியாகும் ஹிந்துக்களுக்கு உதவ கோயில் நிதியினை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
  • இந்து அறநிலையத்துறையின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு இருக்கக்கூடிய 10 கோடி ரூபாயை இந்து அறநிலையத்துறைக்கே திருப்பி அளித்து பசியோடும் பட்டினியோடும் இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு அனைத்து கோயில்களிலும் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் – டாக்டர் கிருஷ்ணசாமி கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்திருந்தார்.
  • சமீபத்தில் ஹிந்துக்களின் கோவில் நிதியை பயன்படுத்தி கோவில்களில் பணிபுரியும் ஹிந்து பக்தர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் பண உதவிகளை வழங்கியுள்ளது.
  • கோவில் இது அல்லாமல் பல கோடி ரூபாயை நிவாரண நிதிக்கு தானாகவே முன்வந்து கொடுத்துள்ளது. பல தனியார் நடத்தும் கோவில்களும் கோடிக்கணக்கான ரூபாயை பிரதமர் நிதிக்கும் மற்ற கொரோனா நிவாரண பணிகளுக்கும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it