Share it if you like it
இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத சீனா அண்மையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தி ஒட்டு மொத்த இந்தியர்களின் உணர்வுகளையும் புண்படுத்தியது. மத்திய, மாநில அரசுகள், சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்தும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு 59 சீன செயலிகளை தடை செய்தது. இதனால் சீனாவிற்கு 6 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீன நிறுவனமான அலிபாபா குழுமத்தின் UC Web இந்தியாவில் தனது வணிகத்தை முழுவதுமாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it