சீன கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க, யாரும் அடிப்படை அத்தியாவசியங்களை இழக்காமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. அதனால் அதிகாரிகள் அவசர காலங்களில் தேவைப்படுபவர்களை அடையக்கூடிய ஹெல்ப்லைன் எண்களை அமைத்துள்ளனர். இந்த எண்கள் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்போது, சிலர் வேடிக்கையாகவும் பயன்படுத்துகிறார்கள்.
இதுபோல் உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்ட நீதிபதி ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து நான்கு சமோசாக்களைக் கொண்டு வரும்படி ஒரு இளைஞர் கிண்டலாக கூறியுள்ளார். மக்களுக்காக இரவும் பகலும் பாராமல் உழைக்கின்ற அதிகாரிகளை நீங்கள் உங்கள் கண்முன்னே தினமும் காண்கிறீர்கள். அப்படி இருந்தும் இதுபோல் செய்வது நாகரீகமானது அல்ல என்பது நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது.
மேலும் அந்த இளைஞரை காவல் துறையினர் எச்சரித்து சமூக சேவையின் ஒரு பகுதியாக ஒரு தெரு முழுவதும் சுத்தம் செய்யும்படி அவருக்கு உத்தரவிட்டது.