அவதூறு பரப்பிய விஷமிகள்.! பதிலடி கொடுத்த விஐபிகள்.!

அவதூறு பரப்பிய விஷமிகள்.! பதிலடி கொடுத்த விஐபிகள்.!

Share it if you like it

வரும் பிப்ரவரி 2 ம் தேதி ‘பாரதத்தின் மறு எழுச்சி’ என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் ASCCENTURE நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமா.எஸ்.ராமசந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த தகவல் வெளியே பரவியதும் விஷமிகள் தங்களது விஷம பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அப்படிபட்ட ஒரு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் இவர்கள் எப்படி கலந்துகொள்ளலாம் என்று அவதூறாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இப்படி செய்வதன் மூலம் பயந்துபோய் இரண்டு சிறப்பு விருந்தினர்களும் தங்களின் வருகையை ரத்து செய்வார்கள் என்று விஷமிகள் எதிர்பார்த்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் நிகழ்த்தப்படும் தாக்குதலை பார்த்து நான் முடிவுகளை மாற்றி கொள்வதில்லை. நான் கலந்து கொள்வது உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள், நாங்கள் சுயமாக சம்பாதிக்கின்றோம், வாழ்கை நடத்துகிறோம் இது போன்ற மிரட்டல்களை கண்டுகொள்ள போவது இல்லை என்று சரியான பதிலடியை விஷமிகளுக்கு கொடுத்து வாய் அடைத்திருக்கிறார் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. அவரின் துணிச்சலான பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it