Share it if you like it
கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலை பெற்றுவந்தது. இந்நிலையில் 12 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளில் காங்கிரசும் ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளனர். தனித்து நின்ற மதசார்பற்ற ஜனதா தளம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 12 தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் பா.ஜ.க அரசு பெரும்பானமையை பெற்றுள்ளது. முதல்வர் எடியூரப்பா ஆட்சியை தக்கவைத்துள்ளார்.
Share it if you like it