ஆட்சியை தக்கவைத்தார் போரிஸ் ஜான்சன்

ஆட்சியை தக்கவைத்தார் போரிஸ் ஜான்சன்

Share it if you like it

பிரிட்டனில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதில் ஆளும் கட்சியான பழமைவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ஆட்சியை தக்கவைத்துள்ளார். மேலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக இடங்களில் ஆளும்கட்சி முன்னணியில் உள்ளது. அதனால் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ மசோதாவானது எளிதாக நிறையவேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சியான தொழிலாளர்கட்சித் தலைவரான ஜெர்மி கார்பின் தனது பதவியை ராஜினாமை செய்துள்ளார். பிரிட்டனில் கடந்த ஐந்தாண்டுகளில் நடக்கும் மூன்றாவது பொதுத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.  


Share it if you like it