ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க-விடம் பங்கு கேளுங்க அர்ச்சகர் பணி நமக்கு தேவையில்லை – ஆம்ஸ்ட்ராங் காட்டம்..!

ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க-விடம் பங்கு கேளுங்க அர்ச்சகர் பணி நமக்கு தேவையில்லை – ஆம்ஸ்ட்ராங் காட்டம்..!

Share it if you like it

ஜாதி, மதம், பார்க்காமல் அனைத்து சமூக மக்களும் உரிய பிரதிநிதித்துவத்தை இன்று வரை வழங்கி வரும் ஒரே கட்சி பா.ஜ.க என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த மா.வெங்கடேஷ் அவர்களை  தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணையர் தலைவராக நியமனம் செய்தது.

ஏழை அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவருமான எல்.முருகன் அவர்களுக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பை வழங்கியது. அவருடன் இணைந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12-பேர், மலைவாழ் மக்கள் 8-பேர், ஓ.பி.சி-யில் 28-பேர் மத்திய அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மோடி தலைமையிலான அரசு பட்டியல் சமூக மக்கள், அருந்ததியர் மக்கள், மழைவாழ் மக்களுக்கு, உரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ஆனால் இன்று வரை இதற்கு மோடி அரசிற்கு பாராட்டுக்களையோ, வாழ்த்துக்களையோ கூறாமல் வழக்கம் போல வன்னியரசு, திருமா, இயக்குனர் பா. ரஞ்சித், போன்றவர் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி அதன் மூலம் ஆதாயம் அடைய முயல்வதாக பலர் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில்

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க-விடம் பங்கு கேளுங்க அர்ச்சகர் பணி நமக்கு தேவையில்லை என்று அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டியல் சமூக இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் தி.மு.க-விற்கு வாக்கு சேகரித்து., முட்டு கொடுத்து வாழும் வன்னியரசு, திருமா, இயக்குனர் பா. ரஞ்சித், போன்றவர்கள் ஆம்ஸ்ட்ராங் போன்று தி.மு.க-விடம் துணிச்சலாக கேள்வி எழுப்ப முதலில் கற்றுக் கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it