வன்முறையை தூண்டும் விதமாகவும், ஹிந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வந்த திமுக கறுப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கையில்லை. தனது உணர்வினை வெளிப்படுத்திய ஓவியர் வர்மா திடீர் என்று கைது செய்யப்பட்டு இருப்பது ஏன்? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வர்மா என்றால் உடனே கைது ஹசிப் முகம்மது என்றால் அச்சமா இது அப்பட்டமான இந்து விரோத போக்கு என்று ஹச் ராஜா அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் திரு. கே.டி ராகவன் கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற மத நம்பிக்கைகள் கொச்சை படுத்தப்படும் போது புகார் இல்லாமலே கூட கைது நடவடிக்கைகளை விரைந்து செய்யும் அதிமுக அரசு இந்து நம்பிக்கைகளை கொச்சை படுத்துபவர்கள் மீது பல புகார்களை ஆதாரத்தோடு கொடுத்தாலும் கைது செய்ய மறுப்பதேன்….

முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்…@CMOTamilNadu
— K.T.Raghavan (@KTRaghavanBJP) July 15, 2020