ஆன்மீகத்தில் தேங்காய், வாழைப்பழம் படைப்பதின்  நோக்கம்!

ஆன்மீகத்தில் தேங்காய், வாழைப்பழம் படைப்பதின் நோக்கம்!

Share it if you like it

 

பொதுவாக நாம் செய்யும் அனைத்து பூஜைகளிலும் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தவறாமல் படைப்பதுண்டு. ஏன் இதை மட்டும் நிச்சயம் படைக்கவேண்டும் என்றால் அதற்கு பின் ஒரு உண்மை ஒளிந்துள்ளது.

மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிரவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.

எனது இறைவா மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மா, பலா, கொய்யா இப்படி எந்த பழத்தை எடுத்துக்கொண்டாலும் அது ஒரு கொட்டையில் இருந்தே முளைக்கிறது. ஒரு மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருது மாமரம் உருவாகிறது. ஆனால் தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.

முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அதுபோல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது வாழையில் கிடையாது. அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இதனால் தான் கடவுளை வணங்கும் போது, தேங்காய் வாழைப்பழம் வைத்து படைக்கிறோம்.


Share it if you like it