ஆப்கன் ஹீரோ உருக்கம்  –  எங்கள் நாட்டு குழந்தைகள் பறவைகளின் கீச்சொலிகளுக்கு நடுவே துயிலெழ வேண்டும் குண்டுச் சத்தத்துக்கு நடுவே அல்ல”

ஆப்கன் ஹீரோ உருக்கம்  –  எங்கள் நாட்டு குழந்தைகள் பறவைகளின் கீச்சொலிகளுக்கு நடுவே துயிலெழ வேண்டும் குண்டுச் சத்தத்துக்கு நடுவே அல்ல”

Share it if you like it

ஆப்கன் நாடு தற்பொழுது தாலிபான்களின் கைகளில் சென்று விட்டது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்நாட்டு மக்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகளையும் இன்னும் சிலர் தங்களின் உறவினர்கள், பெற்றோர்கள், முதியவர்கள், என்று அனைவரையும் விட்டு விட்டு ஆப்கானை விட்டே ஓடும் அவல நிலை தற்பொழுது எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆப்கான் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் உருக்கமான வேண்டுகோள்களை தனது டுவிட்டர் பக்கத்தில்  இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

அன்புள்ள உலகத் தலைவர்களே! எனது நாடு குழப்பத்தில் உள்ளது, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன எங்களை குழப்பத்தில் விடாதீர்கள்.

ஆப்கானியர்களை கொல்வதையும், ஆப்கானிஸ்தானின் கொடியை அழிப்பதையும் நிறுத்துங்கள். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். “குழந்தைகள் கொல்லப்படுவதை விடவும் கொடூரமான விஷயம் ஏதுவுமில்லை. அந்தக் குழந்தைகள் பறவைகளின் கீச்சொலிகளுக்கு நடுவே துயிலெழ வேண்டும். குண்டுச் சத்தத்துக்கு நடுவே அல்ல” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it